கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவை அரசியல் தலையீடுகள் காரணமாக எடுக்கவில்லை என யோசித ராஜபக்ச டெய்லி மிரரிற்கு தெரிவித்துள்ளார்.
உடல்களை அடக்கம் செய்வது குறித்து ஆராய்ந்து அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவை கூடிய விரைவில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார் என யோசித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் குழு உட்பட சுகாதார அதிகாரிகளின் பரிந்துரை மற்றும் ஆலோசனையின் அடிப்படையிலேயே கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் அனைவரினதும் உடல்களையும் தகனம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத விவகாரங்களுக்கான அமைச்சர் என்ற அடிப்படையில் இந்த நாட்டில் அனைத்து மதங்களினதும் உரிமைகளை மதிப்பது என்ற விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்ற உத்தரவாதத்தை பிரதமர் வழங்குகின்றார் என தெரிவித்துள்ள யோசித ராஜபக்ச அவர் சுகாதார அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார், அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த விவகாரத்திற்கு பிரதமர் தீர்வை காண்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment