பிசிஆர் பரிசோதனைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் அட்டுளுகம மக்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

பிசிஆர் பரிசோதனைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க மறுக்கும் அட்டுளுகம மக்கள்

அட்டுலுகம மக்களின் நடவடிக்கைகள் குறித்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர்ந்தும் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றாளர்களை இனம் காண்பதற்கான சோதனைகளுக்கு அந்த பகுதி மக்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க மறுக்கின்றனர் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

அட்டுளுகம கிழக்கில் உள்ள மரவ என்ற கிராமத்தில் நாங்கள் 400 பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டோம். ஆனால் 52 பேரே வந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் குறைந்தளவு ஒத்துழைப்பையே வழங்குவதால் கொரோனா வைரஸ் பரவல் குறித்து அச்சம் காணப்படுவதாக உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

எனினும் அட்டுலுகமவில் உள்ள வெயாங்கல என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகளவு ஒத்துழைப்பை வழங்குகின்றனர் என உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

அந்த கிராமத்தில் 300 சோதனைகளை நடத்த திட்டமிட்டோம் ஆனால் அதிகளவானவர்கள் வந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment