சஹ்ரானின் நுவரேலியா பயிற்சி முகாம் குறித்து தகவல் வழங்கியவருக்கு நடந்தது என்ன? - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வெளியாகிய தகவல் - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

சஹ்ரானின் நுவரேலியா பயிற்சி முகாம் குறித்து தகவல் வழங்கியவருக்கு நடந்தது என்ன? - ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வெளியாகிய தகவல்

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பயிற்சி முகாம் குறித்து தகவல் வழங்கியவரை மௌனமாக்குவதற்கு நுவரேலிய பொலிஸார் முயன்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஆணைக்குழு முன்னிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த நுவரேலியாவைச் சேர்ந்த இளசிங்க என்பவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் இது குறித்து தகவல் வழங்கிய பின்னர் பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் எனது வீட்டிற்கு வந்து தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பயிற்சி முகாம் குறித்த தகவல்களை வேறு எவருக்கும் தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர் என தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பயிற்சி முகாமிற்கு தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிம் அவரின் ஆலோசகர் நவ்பீர் மௌலவி ஆகியோர் கலந்துகொண்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2018 மே மாதம் ஐந்தாம் திகதி நுவரேலியாவில் உள்ள தக்சிலா ஹொலிடே இன்னிற்கு நான்கு வெள்ளை வானில் வந்தவர்கள் பின்னர் அங்கிருந்து செல்லவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தக்சிலா கொலிடே இன் எனது வீட்டிற்கு அருகில் காணப்பட்டது என குறிப்பிட்டுள்ள அவர் ஏனைய சுற்றுலாப்பயணிகள் போல அவர்கள் அங்கிருந்து திரும்பி செல்லவில்லை இரவு முழுவதும் விளக்குகள் எரிந்தன என தெரிவித்துள்ளார்.

அந்த ஹோட்டலின் உரிமையாளரிடம் நான் இதனை தெரிவித்தேன் அவர் எனக்கு தமிழ் தெரியும் என்பதால் எனன நடக்கின்றது என பார்க்குமாறு கேட்டுக் கொண்டார் எனவும் இலசிங்க தெரிவித்துள்ளார்.

நான் அங்கு சென்றவேளை நான் அவர்கள் உரையாடுவதை செவிமடுத்தேன், ஒருவர் ஆயுதங்களையும் பணத்தையும் அங்கு வைத்திருப்பது பாதுகாப்பானதில்லை அதனை காத்தான்குகுடிக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தார் எனவும் இலசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அப்துல்லா என்பவர் ஆயுதங்களை கொண்டு செல்வது பாதுகாப்பற்றது என குறிப்பிட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நான் 119 தொடர்பு கொண்டேன், நுவரேலிய பொலிசுடன் தொடர்புகொள்ள முயன்றேன் என தெரிவித்துள்ள இளசிங்க பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் இலக்கத்தை தொலைக்காட்சி நிகழ்சியொன்றின் மூலம் பெற்று அவரை தொடர்புகொண்ட முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் மகிந்த திசநாயக்க என்ற பொலிஸ் அதிகாரியின் இலக்கத்தை எனக்கு தந்தார் நான் அவரை தொடர்பு கொண்டேன் அவர் நுவரேலிய பொலிஸார் அங்கு வருவார்கள் என தெரிவித்தார். மதியம் 4.30 மணியளவில் ஒரு பொலிஸ் கார் வந்தது ஆனால் அவர்கள் எவரையும் கைது செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நுவரேலியா பொலிஸை சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனது வீட்டிற்கு வந்து சஹ்ரான் குழுவினரை கைது செய்ய முயன்ற தங்கள் தவறினை ஏற்றுக் கொண்டதுடன் இந்த விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். நான் அதனை பகிரங்கப்படுத்தினால் ஐஎஸ்எஸ் என்னை கொலை செய்து விடுவார்கள் என தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினக்குரல்

No comments:

Post a Comment