ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஐவருக்கு கொரோனா - 36 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, December 31, 2020

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஐவருக்கு கொரோனா - 36 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஐவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டிருப்பதை அடுத்து அங்கு கடமையில் இருந்த 36 பொலிஸார் தனிமைப்படுத்தலில் உட்படுத்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸாருக்கு முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது அங்கு புதன்கிழமை 30.12.2020 இடம்பெற்ற ரபிட் அன்ரிஜென் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.

அதனையடுத்து அப்பொலிஸ் நிலையத்தின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள பொலிஸார் ஐவரும் தற்சமயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைப் பிரிவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

அதேவேளை தொற்றுக்குள்ளாகிய பொலிஸாருடன் கடமையிலிருந்த 36 பொலிஸாரும் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள பொலிஸ் கொரோனா தனிமைப்படுத்தல் பிரிவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment