நீர் வழங்கல் ஒப்பந்தக்காரர்களுக்கு நிலுவைத் தொகையான 35 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது - அமைச்சர் வாசுதேவ - News View

About Us

About Us

Breaking

Wednesday, December 9, 2020

நீர் வழங்கல் ஒப்பந்தக்காரர்களுக்கு நிலுவைத் தொகையான 35 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டது - அமைச்சர் வாசுதேவ

மக்களின் தேவைக்கேற்ப தடையின்றிய நீர் வழங்கல் மற்றும் புதிய நீர் இணைப்புகளுக்காக ஒப்பந்தக்காரர்களுக்காக செலுத்தப்படவிருந்த நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த சில மாதங்களில் மட்டும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஒப்பந்தக்காரர்களுக்கு 35 மில்லியன் ரூபாய் செலுத்தியுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நானாயக்கார தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, எமது திட்டங்களில் உள்ளூர் திறன்களை இணைத்து உள்ளூர் ஒப்பந்தக்காரர்களை இணைத்துக் கொள்வதே எமது நோக்கமாகும். 

உரிய தரத்தை பூர்த்தி செய்து உயர்தர சேவையை வழங்கும் ஒப்பந்தக்காரர்களை நாங்கள் எப்போதும் பாதுகாக்கிறோம், மேலும் எமது கொடுப்பனவுகளில் ஏதேனும் தாமதங்கள் ஏற்பட்டு ஒப்பந்தக்காரர்களை நஷ்டமடைய அனுமதிக்க மாட்டோம் என்று குறிப்பிட்டார். 

எவ்வாறாயினும், எமது திட்டங்களை பணயக்கைதிகளாக வைத்திருக்க ஒப்பந்தக்காரர்களுக்கு இடமளிக்கமாட்டோம் என்றும் அவர்களின் எந்தவொரு கோரிக்கைக்கும் செவிசாய்க்க தாம் எப்போதும் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 

மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நீரை வழங்குவதே எமது தேவையாகும். இதற்காக, முழு அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் பணியாற்றி வருவதுடன், 2025 க்குள் அனைவருக்கும் குடிநீரை வழங்கும் எமது முதன்மை நோக்கத்தை அடைய எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment