சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும் வகையில் விரைவில் 8,000 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு' சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் அதிகரித்துவரும் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய 28 சிறைச்சாலைகளில் தற்போது 28 ஆயிரத்து 951 சிறைக்கைதிகள் உள்ளனர்.
பொது மன்னிப்பு வழங்கக் கூடிய சிறைக்கைதிகளை தேர்ந்தெடுத்து அவர்களை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் நீதி அமைச்சு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளது.
அந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததும் இருபது வருடங்கள் தண்டனை காலத்தை அனுபவித்துள்ள சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அதற்கு பதிலாக 20 வருட சிறை தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment