கொவிட்-19 குறித்து இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் மூலிகை வைத்தியங்களை பயன்படுத்த வேண்டாம் - News View

About Us

About Us

Breaking

Monday, December 14, 2020

கொவிட்-19 குறித்து இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் மூலிகை வைத்தியங்களை பயன்படுத்த வேண்டாம்

(செ.தேன்மொழி) 

கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சிறந்தவை என்று குறிப்பிட்டு இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் மருந்து பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என்று தேசிய வைத்திய துறை முன்னேற்றம், கிராம ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி மற்றும் பிரஜைகள் சுகாதார சேவை இராஜாங்க அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர தெரிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதற்கும் சிறந்த மருத்துவ பொருட்கள் என்று இணையத்தில் சில பொருட்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்த மருந்து பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

ஆயுர்வேதம் மற்றும் தேசிய மருத்துவ முறையூடாக மருந்து பொருட்கள் தயாரிக்கும் போது. அந்த மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலிகைகள் தொடர்பிலும் விளக்கம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

ஏதாவது மூலிகைச் செடியை பயன்படுத்தும் போது அதில் எந்த பகுதியை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும் விளக்கம் பெற்றிருக்க வேண்டும்.

ஏதாவது ஒரு மூலிகையின் வேரை பயன்படுத்த வேண்டிய இடத்தில் அந்த மூலிகைச் செடியின் வேறு பகுதிகளை பன்படுத்தினால் அது ஆபத்தை ஏற்படுத்தும்.

அதனால், வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகளை பின்பற்றிங்கள்.

மேலும் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவதற்காக தேசிய முறையாலான மருந்து கண்டுபிடிக்கும் செயற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதால், அந்த மருந்து பொருள் தொடர்பில் பரிசோதனைகள் முடிந்தவுடன் அது சிறந்த்து என்றால் அது தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment