குருநாகல் வெல்லவப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமத்தில் நடைபெற்ற பூப்பெய்தல் நிகழ்வில் இரு கொரோனா தொற்றாளர்கள் கலந்து கொண்டமையினால் அதற்கு சமுகமளித்திருந்த வெல்லவப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் 7 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பாகமுவ பெரியகடுநெலுவ பகுதியை வதிவிடமாகக் கொண்ட பொலிஸ் அதிகாரியின் மகளுடைய நிகழ்வில் கொழும்பு பம்பலப்பிட்டிப் பிரதேசத்திலுள்ள அவருடைய உறவினர், பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் அவருடைய மகள் சமுகமளித்துள்ளனர்.
அவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவிக்கின்றது.
இந்த இருவரும் குறித்த பூப்யெய்தல் நிகழ்வுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்பட்டிருந்த போதிலும் பெறுபேறு வருவதற்கு முன்னர் அங்கு வருகை தந்துள்ளனர்,
இந்நிகழ்வில் கலந்து விட்டு பின்னர் மீண்டும் கொழும்பு வந்த பிற்பாடு பொலிஸ் அதிகாரிக்கும் மற்றும் அவருடைய மகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது.
அதனை அடுத்து பூப்பெய்தல் நிகழ்வில் கலந்து கொண்ட வெல்லவப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகள் 07 பேரையும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மாவத்தகம நிருபர்
No comments:
Post a Comment