பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபா சம்பளம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 17, 2020

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் ஆயிரம் ரூபா சம்பளம்

அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களுக்கான ஒரு நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக வழங்க வேண்டும், அவ்வாறு வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்ட திருத்தங்கள் ஜனவரியில் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்படும் எனவும் பிரதமர் கூறினார்.

நாட்டின் 75 ஆவது வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு பாராளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றினார். இதன்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இதில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம் தீர்மானிக்கப்பட்டு வருகிறது. இதனை வரவு செலவு திட்ட ஊடாக அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த கொடுப்பனவாக ஆயிரம் ரூபா வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments:

Post a Comment