யாழ்ப்பாணம் மண்டைதீவில் சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி! - News View

Breaking

Post Top Ad

Saturday, November 21, 2020

யாழ்ப்பாணம் மண்டைதீவில் சிறுவர்கள் இருவர் நீரில் மூழ்கி பலி!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று (21) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையார் பணியில் இருந்த சமயம் சுற்றத்தில் விளையாடிய சிறுவர்கள் இருவரும் வயல் பகுதியில் அயலவர்கள் வெட்டிய குழியில் தவறி வீழ்ந்தபோது, அதிலிருந்த சேறும் சகதியிலும் சிக்கி மேற்படி அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது-5) ஆகிய இருவருமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment

Post Bottom Ad