தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றினார் இம்ரான் கான் - மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் போராட்டம் - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றினார் இம்ரான் கான் - மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் போராட்டம்

கில்கிட் - பல்திஸ்தான் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் இம்ரான் கானின் கட்சி மூலம் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தியாவின் எதிர்ப்பு மற்றும் போராட்டக் குழுக்களின் எச்சரிக்கைக்கு மத்தியில், கில்கிட் - பல்திஸ்தான் சட்டமன்றத் தேர்தலை பாகிஸ்தான் நடத்தியது. 

23 தொகுதிகள் கொண்ட இந்த பகுதியில், இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 10 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆளுங்கட்சி கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 3 இடங்களும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டு இடங்களும் கிடைத்தன. மஜ்லிஸ் கட்சி ஒரு தொகுதியில் வென்றது. 7 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கில்கிட் - பல்திஸ்தான் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக கூறி எதிர்க்கட்சிகள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டு ஆளுங்கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். 

மேலும், இந்த தேர்தல் மோசடியை எதிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கைகளில் பதாகைகள் மற்றும் கொடிகளை ஏந்தி வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மரியம் நவாஸ் உள்ளிட்ட தலைவர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad