பயன்படுத்தப்படும் முகக்கவசம், கையுறைகளை அகற்றுவதில் பாரிய சுகாதார பிரச்சினை - அமைச்சர் மஹிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, November 16, 2020

பயன்படுத்தப்படும் முகக்கவசம், கையுறைகளை அகற்றுவதில் பாரிய சுகாதார பிரச்சினை - அமைச்சர் மஹிந்த அமரவீர

நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் முகக்கவசம், கையுறை போன்ற கழிவுகளை அகற்றுவதில் பாரிய சுகாதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கு இடமிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இவற்றை அகற்றும் பொழுது எந்தவித சுகாதார ஆலோசனைகளும் கடைபிடிக்கப்படுவதில்லை என்று கண்டரியப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், இதன் காரணமாக மத்திய சுற்றாடல் அதிகார சபை இந்த கழிவுப் பொருட்களை அகற்றும் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டல்களை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

முகக்கவசம் மற்றும் கையுறைகள் என்பவற்றை அகற்றுவதற்கு முன்னர் அவற்றை சவர்க்காரம் இட்டு கழுவி உலர்த்த வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் வைரஸ் சுற்றாடலில் சேரும் அனர்த்தம் ஏற்படுவதுடன் அவை நீருடன் கூட கலந்து மீண்டும் மனித உடம்பில் உட் போகக்கூடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Covid -19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோரினால் அகற்றப்படும் கழிவுப் பொருட்கள் மஞ்சள் நிற பொதியில் இடப்பட்டு அகற்றப்படுவது அவசியமாகும்.

இவற்றை எந்த வகையிலும் மீள்சுழற்சி செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அங்குனுகொல பெலஸ்ஸவில் நேற்று இடம்பெற்ற செயலமர்வில் உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

No comments:

Post a Comment