முதிரைக் குற்றிகளுடன் வாகனம் மீட்பு - கடத்தல் காரர்கள் தப்பியோட்டம் - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

முதிரைக் குற்றிகளுடன் வாகனம் மீட்பு - கடத்தல் காரர்கள் தப்பியோட்டம்

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்களூர் காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடத்திச் செல்லப்படவிருந்த முதிரைமரக் குற்றிகளும், அறுக்கப்பட்ட முதிரைப் பலகைகளும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனமும் பூவரசங்குளம் விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த காட்டுப் பகுதியில் முதிரை மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவதாக பூவரசங்குளம் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நேற்றிரவு (16) அப்பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் விசேட அதிரடிப் படையினர், குறித்த மரக் கடத்தல் காரர்களை மடக்கி பிடிக்க சென்றபோது, மரக் கடத்தல் காரர்கள் வாகனத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 9 முதிரை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றபட்ட முதிரைக் குற்றிகளும் வாகனமும் பூவரசங்குளம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இக்கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை, பூவரசங்குளம் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

(ஓமந்தை விசேட நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad