கொரோனா தொற்றாளர்களையோ அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை அவமானப்படுத்துவதோ துன்புறுத்துவதையோ சமூகத்திலுள்ளவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். என வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் சமூகத்திலுள்ளவர்கள் தேவையற்ற விதத்தில் கருத்துக்ககளை தெரிவிக்கவோ பதிவு செய்யவோ வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.
கொரோனா தொற்றானது தவறானவர்களுக்கு மட்டும்தான் வருவதல்ல இது யாருக்கும் எந்த நேரத்திலும் வரக்கூடிய ஒன்று. எனவே கொரோனா தொற்றாளர்களையோ அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தனிமைப்படுத்தலில் இருந்தவர்களை அவமானப்படுத்துவதோ துன்புறுத்துவதையோ சமூகத்திலுள்ளவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை சார்பாக கேட்டுக் கொள்கின்றேன்.
ஊடகங்களும் இவை தொடர்பான செய்திகளை வெளியிடும் போது பொறுப்புடன் செயற்படவேண்டும். என்றார்.
No comments:
Post a Comment