பிரவேசிக்கவோ, வெளியேறவோ முடியாது - எவ்வித தளர்வு போக்கும் காட்டப்பட மாட்டது என்கிறார் அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

பிரவேசிக்கவோ, வெளியேறவோ முடியாது - எவ்வித தளர்வு போக்கும் காட்டப்பட மாட்டது என்கிறார் அஜித் ரோஹண

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருணாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் சில பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குறித்த பகுதிகளுக்குள் யாரும் பிரவேசிக்கவோ அல்லது அங்கிருந்து வௌியேறவோ முடியாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருப்போர் அதிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது வெளியில் இருப்பவர்களுக்கு இந்த பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரதேசத்தில் உள்ள தொழில் மற்றும் ஏனைய பணிகளில் ஈடுபடுவோருக்கும் இங்கிருந்து வெளியேறுவதற்கு முடியாது என அவர் தெரிவித்துள்ளார். விசேடமாக சுகாதரப் பிரிவு அறிவித்துள்ளதற்கு அமைவாக இவை தனிமைப்படுத்தப்பட்ட ஆபத்தான பிரதேசங்கள் என்பதாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 494 பொலிஸ் பிரிவுகள் உள்ளதாகவும் அதில் 25 பொலிஸ் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் ஊடாக செல்லும் வாகனங்கள் நிறுத்தப்படாமல் செலுத்தப்பட வேண்டும். இதற்கமைவாக, இந்த பிரதேசங்களில் பயணிகளை இறக்குதல் அல்லது அழைத்துச் செல்லல் முதலானவற்றை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment