கேகாலை மாவட்டத்தில், புளத்கொஹுபிட்டிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள், கலிகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் யாவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (02) இரவு முதல் கேகாலை மாவட்டத்தில், மாவனல்லை, ஹெம்மாத்தகம, புளத்கொஹுபிட்டிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகள், கலிகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் யாவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment