ஓட்டமாவடி அ.ச.மு.சதீக்
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் மீராவோடை கிழக்கு வட்டார உறுப்பினர் எஸ்.ஏ. அன்வர் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் மீராவேடை பிரதேசத்தில் வடிகான்களின் துப்பரவு பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயின் அபாயம் காரணமாக பலர் வைத்தியசாலைகளின் அனுமதிக்கப்பட்டும் மற்றும் டெங்கு நோயின் காரணமாக ஒருவர் இறந்தும் உள்ள நிலையில் வடிகான்களின் துப்பரவு செய்யும் வேலைகளை மிகவும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இதனை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம். நௌபர், பிரதி தவிசாளர் யூ.எல். அஹமட், பிரதேச சபையின் செயலாளர் எஸ்.எம். சிஹாப்தீன் அவர்களின் வழிகாட்டலின் கீழும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் வடிகான் மேற்பார்வையாளர் சீ.எஸ். இஸ்ஸத்தீன் அவர்களின் மேற்பார்வையின் கீழும் இப்பணிகள் இடம்பெறுகின்றன.
இபபிரதேசத்தில் வடிகான்களில் ஓட்டமாவடி தொடக்கம் மீராவோடை வரை இடப்பட்ட காபெட் றோட் வேலைகளுக்காக பறிக்கப்பட்ட கற்கள் மற்றும் ஏனைய பொருட்கள் இவ்வடிகான்களுக்குள் சென்று நீர் வழிந்தோடமால் தேங்கி நிற்பதனையும் இவ்வடிகான்களுக்கு அண்மையில் புதிதாக வீடுகளை நிர்மாணிப்பவர்கள் அவ்வீட்டு வேலைகளுக்காக கொண்டு வரும் மண்கள் மற்றும் கொங்கீறீட் முக்கால் இஞ்சி கற்கள் என்பவற்றை வடிகான்களுக்கு மேல் பறிக்கின்ற பொழுது இவ்வடிகான்களுக்குள் சென்று நீர் வழிந்தோடமல் தேங்கி நிற்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
வடிகான்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளிலுள்ள கழிவு நீர்களை இதனுள் சட்ட விரோதமாக விடுவதனாலும் இவ்வடிகான்களில் மழை அல்லாத காலங்களில் நீர் தேங்கி காணப்படுகின்றது.
இவ்வாறான் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் தவிர்ப்பதற்கு பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஒரு ஒழுங்கான நேர அட்டவணை பிரகாரம் வருடா வருடம் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை இவ்வடிகான்களின் துப்பரவு பணிகள் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment