நாட்டில் அடுத்த சில வாரங்களில் முன்னேற்றகரமான நிலையேற்படலாம் - பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

நாட்டில் அடுத்த சில வாரங்களில் முன்னேற்றகரமான நிலையேற்படலாம் - பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம்

இலங்கையில் அடுத்த சில நாட்களில் கொரோனா வைரஸ் பரவலில் இருந்து பெரிய முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் ஹேமந்த ஹேரத் இது குறித்து கூறுகையில், தற்போதுள்ள கொத்தணிகள் தொடர்பான நிலைமை மூன்று தனிமைப்படுத்தல் காலங்களுக்குப் பின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வரக்கூடும் எனத் தெரிவித்தார்.

ஒரு தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்களைக் கொண்டுள்ளது. எனவே மூன்று தனிமைப்படுத்தல் காலங்கட்கு பின் (42 நாட்கள்) நிலைமை கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்படும் என்று அவர் கூறினார்.

புதிய கொத்தணிகளான பொலிஸ் மற்றும் சிறைச்சாலை ஆகிய மூடப்பட்ட கொத்தணிகள் அவற்றைக் கட்டுப்படுத்தலாம் என்றும் திறந்த கொத்தணிகளுடன் ஒப்பிடுகையில் மூடப்பட்ட இந்தக் கொத்தணிகள் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் கூறினார்.

மூன்று தனிமைப்படுத்தல் காலங்களின் பின் மினுவாங்கொட கொத்தணி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

புதிய உப கொத்தணிகள் எதுவும் எதிர்பாரா விதமாக வெளிவராத நிலையில் தற்போதுள்ள கொத்தணிகளுடன் இது போன்றதொரு நிலைமை எதிர்பார்க்கப்படுவதாகவும் பிசிஆர் பரிசோதனைகளைத் தொடர்வதன் மூலம் உப கொத்தணிகள் தோன்றுவதை நாம் தடுக்க முயற்சிக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

ஒரு புதிய உப கொத்தணி தோன்றாமல் தடுப்பதற்கான சிறந்த வழி தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து வீட்டிலேயே இருப்பதாகும் என மருத்துவர் ஹேமந்த ஹேரத் மேலும் கூறினார்.

கொழும்பிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு எல்லைகளைக் கடப்பது ஒரு புதிய கொத்தணி உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துவதுடன் அது நிலைமையைச் சிக்கலாக்கும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment