துறைமுக அதிகார சபை - அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி வெளியீடு - News View

Breaking

Post Top Ad

Wednesday, November 18, 2020

துறைமுக அதிகார சபை - அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி வெளியீடு

துறைமுக அதிகார சபையின் பணிகளை அத்தியாவசிய பொதுச் சேவையாக பிரகடனப்படுத்திய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் அதற்கமைவாக மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவொரு தன்மையிலான சேவையின் சகல சேவைகள், வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்பு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad