பிரான்சில் கிரேக்க பாதிரியாரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள லயான் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் கிரேக்க நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் அடையாளம் தெரியாத நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
தேவாலயத்தை மூடும் பணியில் பாதிரியார் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த நபர் பாதிரியாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
நேற்று சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி (15:00 GMT) பாதிரியார் தனது தேவாலயத்தை மூடும்போது நடந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த பாதிரியார் நிகோலா ககவேலகிஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் உள்ளார் மற்றும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடிவயிற்றில் 2 குண்டுகள் பாய்ந்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிரியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
துப்பாக்கியால் சுட்ட நபரை நேரில் பார்த்தவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து தெளிவான தகவல் கிடைக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, கடந்த 29ம் திகதி பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் 3 பேர் கழுத்து அறுத்து கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment