ஏ.எச்.ஏ. ஹுஸைன்
நாட்டில் தற்போது நெருக்கடியைத் தோற்றுவித்துள்ள கொரோனா வைரஸ் தீவிரத்தைக் குறைக்க நோன்பிருந்து பிரார்த்திக்குமாறு ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவணனங்களின் சம்மேளனம் பிரதேச வாழ் பொதுமக்களைக் கேட்டுள்ளது.
இதுபற்றி ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஞாயிறன்று 08.11.2020 வெளியிட்டுள்ள பொது அறிவித்தலில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது எமது நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி நாட்டை ஆபத்தான நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.
எமது பிரதேசத்திலும் கொரோனா வைரஸின் தாக்கம் உணரப்பட்டுள்ளது. இவ்வேளையில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
அத்தோடு திங்களன்று 09.11.2020 நோன்பு நோற்க தகுதி பெற்ற அனைவரும் நோன்பிருந்து இந்நோயிலிருந்து விடபட இறைவனிடம் இறைஞ்சுதல்களில் ஈடுபட வேண்டும்.
அத்துடன் முடியுமானவர்கள் அடுத்து வரும் ஒரு மாதகாலத்திற்கு தமது ஐவேளைத் தொழுகைகளில் குனூத் அந்நாஸியாவை ஓதிப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment