வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுங்கள் - சாணக்கியம் எம்.பி. அமைச்சர் தினேஸ் குணவர்த்தவிடம் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வர நடவடிக்கை எடுங்கள் - சாணக்கியம் எம்.பி. அமைச்சர் தினேஸ் குணவர்த்தவிடம் கோரிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தவினை இன்று (19) சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், இது தொடர்பான மகஜர் ஒன்றினையும் இரா.சாணக்கியன், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தவிடம் கையளித்துள்ளார்.

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தொழில் நிமிர்த்தம் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கையர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பணியிடங்களுக்குச் செல்ல முடியாமலும், மூன்று வேளை உணவின்றியும் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தங்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்கள் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையிலேயே குறித்த விடயத்தினை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தவின் கவனத்திற்கு கொண்டு வந்த இரா.சாணக்கியன், உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment