மேல் மாகாணத்திலிருந்து வெளியே செல்வதையோ, உட்செல்வதையோ முடிந்தளவு தவிர்க்கவும் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

மேல் மாகாணத்திலிருந்து வெளியே செல்வதையோ, உட்செல்வதையோ முடிந்தளவு தவிர்க்கவும் - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்

அத்தியாவசியமான காரணங்கள் தவிர மேல் மாகாணத்திலிருந்து வெளிப்பிரதேசங்களுக்கு செல்லுதல் மற்றும் மேல் மாகாணத்திற்குள் உட் பிரவேசித்தலைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அது தொடர்பில் மக்கள் தமது பொறுப்பை சரியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இனங் காணப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் மூலத்தை தேடிப் பார்க்கும் போது அது பெரும்பாலும் மேல் மாகாணமாகவே இருப்பதாகவும் குறிப்பாக கொழும்பு நகரில் இருந்து வெளிப்பிரதேசங்களுக்கு சென்றவர்களே குறித்த வைரஸ் தொற்றாளர்கள் என்பது தெரிய வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக அவதானமாக செயற்பட வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். கொழும்பு நகரின் பல்வேறு பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்காக முடக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக, அத்தியாவசிய சேவைகளுக்காக அனுமதியை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

சில பிரதேசங்களுக்கு நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் உட்பிரவேசிப்பதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையை காரணமாக வைத்துக் கொண்டு கொழும்பு நகரின் பல பிரதேசங்களிலும் கொழும்பு நகரில் இருந்து வெளி பிரதேசங்களுக்கும் மக்கள் நடமாட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. எச்சரிக்கை மிகுந்த பிரதேசங்கள் ஊடாக மக்கள் நடமாட்டத்தை அரசாங்கம் கட்டுப் படுத்தினாலும் தொடர்ந்தும் நடமாட்டங்கள் இடம் பெற்று வருகின்றன.

அதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புதிதாக வைரஸ் தொற்று நோயாளர்கள் உருவாகின்றார்கள்.அதற்கான காரணங்களை தேடி பார்க்கும்போது கொழும்பு நகரில் இருந்தும் மேல் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்றவர்களுக்கே அவ்வாறு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதனால் நாம் மக்களிடம் கேட்டுக்கொள்வது மேல் மாகாணத்திலிருந்து வெளி பிரதேசங்களுக்கு செல்வதும் வெளி பிரதேசங்களிலிருந்து மேல் மாகாணத்திற்கு உட்பிரவேசிப்பதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள் மிக அத்தியாவசியமான காரணங்கள் அன்றி அவ்வாறு பயணிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment