கத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, November 1, 2020

கத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் கொரோனா நிவாரண நிதி சேகரிப்பு

எம்.ஐ. லெப்பைத்தம்பி

தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவும் நோக்கில் கத்தார் வாழ் கல்குடா சகோதரர்கள் ஒன்றிணைந்து நிதி சேகரிப்பு பணியினை கத்தாரிலுள்ள கல்குடா சகோதரர்களிடம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். 

கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்படவுள்ள குறித்த நிவாரண நிதி சேகரிப்பின் முதற்கட்டம் எதிர்வரும் 05.11.2020ம் திகதி வரை இடம்பெறுமெனவும், குறித்த திகதிகதிக்குள் சேகரிக்கப்படும் நிதிகள் மூலம் கொள்வனவு செய்யப்படும் உணவுப் பொதிகள் முதற்கட்டமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மிகத் தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

சேகரிக்கப்படும் நிதிகள் யாவும் இன்றைய கால சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டும் பிரதேசத்தில் கடைப்பிடிக்கப்படும் இறுக்கமான விதிமுறைகள் மற்றும் ஊரடங்குச் சட்டத்தினைக் கருத்திற் கொண்டு பிரதேச செயலகம், கொரோனா தடுப்புச் செயலணி ஊடாகப் பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய குடும்பங்களை இனங்கண்டு உதவி வழங்கவும் இரண்டாம் நிலையிலுள்ள சிறுகைத்தொழில் செய்வோர், தினக்கூலி மற்றும் பல்வேறு வேறு வழிகளில் வருமான இழப்பினை எதிர்கொண்டுள்ளோருக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆகவே, கத்தாரிலுள்ள கல்குடாப் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்களும் ஏனைய சகோதரர்களும் தம்மாலியன்ற உதவிகளை குறித்த திகதிக்கு முன்னர் வழங்கி பாதிக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு உதவிட ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம். 

உதவிகளை வழங்கவுள்ள சகோதரர்கள் கீழுள்ள இணைப்பிலுள்ள விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்யுமாறும் அவ்வாறு பூர்த்தி செய்கின்ற பட்சத்தில் உங்களை இலகுவாகத் தொடர்பு கொண்டு நிதியினை சேகரித்துக் கொள்ள வாய்ப்பாக அமையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

அத்தோடு எம்மால் மேற்கொள்ளப்படும் நிதியுதவிகள் மற்றும் சேகரிக்கப்படும் நிதியுதவிகள் மூலம் வழங்கப்படும் நிவாரண உதவிகள் பற்றிய முழுத்தகவலும் தரவுகள் அடிப்படையில் வெளியிடப்படும்.

இணைப்புக்கு: 


உதவிகளை வழங்கவும் மேலதிகத் தகவல்களுக்கும் கீழுள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 

Fawsar Mov
+974 7449 6536

Tuan Ashar
+974 7700 9037

Fazal Eng
+974 7045 2512

Issath
+974 66031219

Jasmin 
+974 3370 5373

Mahroof
+974 7783 2283

Aarif
+974 5549 6132

Irsad 
+974 7771 6971

Uwaisdeen 
+974 3312 3918

Haneez 
+974 3088 7110

Mumtiyas
+94 76 101 0521

No comments:

Post a Comment