கோவிட் 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம் சடலங்களை புதைக்க அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும். பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், அவசரப்படாமல் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய காலம் இது. இடர் முகாமைத்துவ தேசிய கவுன்சிலை உடனடியாக அமைத்து எதிரணிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.
நாடு பாரிய அனர்த்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. இறந்தவர்களை அடக்குவது தொடர்பான பிரச்சினை பாரதூரமான பிரச்சினையாக வளர்ந்துள்ளது. முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி கத்தோலிக்க மக்களுக்கும் இது தொடர்பில் பிரச்சினை உள்ளது.
இதிலுள்ள விஞ்ஞானபூர்வமான அடிப்படையை உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. அமைச்சர் அலி சப்ரி எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாகவும் பிரதமர் அதற்கு அளித்து வரும் ஒத்துழைப்பும் பற்றி எமக்கு தகவல் கிடைத்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்
No comments:
Post a Comment