மத்ரஸாக்களில் கற்பிப்பதற்காக விசா கேட்டு வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும் - ஜீ.எல். பீரிஸ் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 21, 2020

மத்ரஸாக்களில் கற்பிப்பதற்காக விசா கேட்டு வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும் - ஜீ.எல். பீரிஸ்

மத்ரஸா பாடசாலைகளில் கற்பிப்பதற்காக விசா கேட்டு இலங்கை வருவோர் பற்றி உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும். அத்தகையோரின் பின்புலம், கடந்த காலம் போன்றவை பற்றியும் ஆராயப்பட இருப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலம் தொடக்கம் மத்ரஸா பாடசாலைகள் மீது கவனம் செலுத்தப்பட்டது. 

இந்தப் பாடசாலைகளுக்கான ஆட்சேர்ப்பு, மாணவர் அனுமதி போன்ற நடைமுறைகளை சீராக்க பொறிமுறையொன்று அமுலாக்கப்பட்டதாக அமைச்சர் பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

இந்த நடைமுறையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம், புலனாய்வு அமைப்புக்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்பைப் பெறுவது அத்தியாசியமானதெனவும் அவர் கூறினார்.

மத்ரஸா பாடசாலைகள் குறித்து தாம் அடிக்கடி கவனம் செலுத்தி வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment