தனிமைப்படுத்தல் தொடர்மாடி குடியிருப்பாளர்கள் பட்டினியில், பாராளுமன்றில் மரிக்கார் எம்.பி சுட்டிக்காட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 14, 2020

தனிமைப்படுத்தல் தொடர்மாடி குடியிருப்பாளர்கள் பட்டினியில், பாராளுமன்றில் மரிக்கார் எம்.பி சுட்டிக்காட்டு

கொழும்பிலுள்ள தொடர்மாடி வீடுகளிலுள்ள மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதும் அவர்களுக்கு உணவு எதுவும் வழங்கப்படவில்லை. அதனால் மக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளதாக எஸ்.எம்.மரிக்கார் எம்.பி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கொரோனா தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூறியதாவது, ஒன்றரை மாதத்தில் 11 ஆயிரமாக கொரோனா நோயாளர்கள் அதிகரித்துள்ளனர். கொழும்பில் பரிசோதனை நடத்தும் பலருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. நாட்டாமைகளில் 25 வீதமானவர்களுக்கு கொரோனா இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள தொடர்மாடிகளில் வாழும் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு உணவு எதுவும் வழங்கப்படவில்லை. இதுதான் இவர்களின் முகாமைத்துவமா? வீடுகளில் விழுந்து மக்கள் இறக்கின்றனர். ஆனால் அவர்கள் கொரோனாவினால் இறப்பதாக அறிவிக்கப்படுகிறது.

பாலம், பாதை எதுவும் அமைக்காமல் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்குவதற்கு 2 டிரில்லியன் பணம் செலவிடப்பட்டுள்ளது. மூன்றின் இரண்டு பெரும்பான்மை இருந்தாலும் இயலாதவர்களுக்கு இயலாததுதான். 

ருகுணு பல்கலைக்கழக ஆய்வின் படி அடகு பிடிக்கும் நிலையங்களில்தான் நீண்ட வரிசை இருப்பதாக கூறப்படுகிறது.7 வீதமான மக்களின் வருமான வழிகள் முற்றாக மூடப்பட்டுள்ளன. பொருளாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிங்களவர் ஒருவர் இறந்தால் அவர்களது மத அனுஷ்டானங்களை செய்ய அனுமதி கிடையாது. கத்தோலிக்கர் ஒருவர் இறந்தாலும் புதைப்பதற்கு அனுமதி இல்லை. புதைக்க அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறுகிறார்

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

No comments:

Post a Comment