கொரோனா தொற்றிய கைதிகளின் எண்ணிக்கை 285 - போகம்பறை பழைய சிறையில் மேலும் 80 பேர் அடையாளம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 14, 2020

கொரோனா தொற்றிய கைதிகளின் எண்ணிக்கை 285 - போகம்பறை பழைய சிறையில் மேலும் 80 பேர் அடையாளம்

சிறைச்சாலைகளில் இருந்து பதிவான கொரோனா நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை 285 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று (14) கண்டி, போகம்பறை பழைய சிறைச்சாலையில் இருந்து 80 தொற்றாளர்களும், குருவிட்ட சிறைச்சாலையில் 14 பெண் கைதிகளும் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இவ்வெண்ணிக்கை 285ஆக அதிகரித்துள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, போகம்பறை சிறையிலிருந்து அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் (12) போகம்பறை சிறைச்சாலையில், சிறைக்கைதிகள் சிலர் தங்களுக்கு PCR சோதனை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலை கூரையின் மீது ஏறி போராட்டம் நடத்தியிருந்தனர். 

இதனைத் தொடர்ந்து, அவர்களுக்கு PCR சோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment