கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பண பரிமாறலை கட்டுப்படுத்தல் அவசியம் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 7, 2020

கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள பண பரிமாறலை கட்டுப்படுத்தல் அவசியம்

புதிய கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு ஆகக் குறைந்த பண பரிமாற்றத்தில் ஈடுபடுவது முக்கியமாகும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், புதிய தொழில்நுட்ப கொடுப்பனவு முறையில் ஈடுபடுதல் அல்லது பண பரிமாற்றத்தை மேற்கொண்ட பின்னர் கை கழுவுவதன் மூலம் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருக்க முக்கிய நடவடிக்கையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பணம் மாத்திரம் இன்றி பொருட்களை பரிமாறும் போதும் சுகாதார பாதுகாப்பு முறையை கடைப்பிடித்தல் மிக முக்கியமானதாகும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment