பல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம் - News View

Breaking

Post Top Ad

Monday, November 23, 2020

பல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்

2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ஆரம்பமாகியுள்ளது. 

மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை செய்வதற்கான நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இம்முறை 41 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான விபரங்களை www.ugc.ac.lk என்ற இணையத்தளத்தில் அல்லது www.selection.ugc.ac.lk என்ற இணைத்தளத்திலோ பார்வையிட முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad