மருதனார்மடம் சந்தை கட்டடத் தொகுதியில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் வியாபாரிகளுடன் கலந்துரையாடல்! - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

மருதனார்மடம் சந்தை கட்டடத் தொகுதியில் இட ஒதுக்கீடு விவகாரம் தொடர்பில் வியாபாரிகளுடன் கலந்துரையாடல்!

வலி. தெற்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உள்பட்ட மருதனார்மடம் பொதுச்சந்தையின் புதிய கட்டடத் தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீட்டில் காணப்படும் முரண்பாடு தொடர்பில் இன்று (புதன்கிழமை) கலந்துரையாடப்பட்டது.

மருதனார்மடம் பொதுச் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சந்தைக் கட்டடத் தொகுதியில் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக வியாபாரிகளால் எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், வலி தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் லகிந்தன், யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன், மனிப்பாய் பிரதேச அமைப்பாளர் வீரா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சந்தை வியாபாரிகளுடன் இன்று கலந்துரையாடினர்.

பிரதேச சபையினால் வழங்கப்பட இருக்கும் இடத்தின் அளவீடு தமது வியாபார நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு போதுமானதாக இல்லை என வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.

வியாபாரிகளின் பிரச்சினை தொடர்பில் சபையின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் தவிசாளரினால் தீர்வு கிடைக்காவிடின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீரமானிப்பது எனவும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment