கண்டி மாவட்டத்தில் இதுவரை 41 கொரோனா தொற்றாளர்கள் - 1,122 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

கண்டி மாவட்டத்தில் இதுவரை 41 கொரோனா தொற்றாளர்கள் - 1,122 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கண்டி மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றாளர்கள் 41 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 1,122 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று கண்டி மாவட்டச் செயலாளர் சந்தன தென்னக்கோன் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலான கூட்டம், மாவட்டச் செயலகத்தில், நடைபெற்றது. அதன்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தின் கங்கவட்டகோரளய பகுதியில் ஒருவரும் குண்டசாலை பிரதேச செயலாளர் பிரிவில் 5 பேரும் பாதத்தும்பறையில் ஒருவரும் யட்டிநுவரவில் இருவரும் உடபலாத்தயில் 9 பேரும், இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

மேலும் தெல்தொட்டையில் 4 பேரும் மெதத்தும்பறையில் 4 பேரும் உடதும்பறை, மினிப்பே, அக்குறணை, ஹரிஸ்பத்துவ ஆகிய பிரதேசங்களில் தலா ஒருவரும் தும்னேயில் இருவரும் கங்கஇஹலகோரள பகுதியில் ஐவரும் இனங்காணப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இவ்வாறு இனங்காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா 10,000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொருள்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment