பதுளை இ.போ.ச. பேருந்து டிப்போவின் 8 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Monday, November 2, 2020

பதுளை இ.போ.ச. பேருந்து டிப்போவின் 8 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

பதுளை இ.போ.ச. பேருந்து டிப்போவின் 8 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அம்மாவட்ட மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பதுளை மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள கொழும்பைச் சேர்ந்த பொலிஸ் அதியாரியொருவருடன் தொடர்பிலிருந்தவர்களே இவ்வாறு சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பில் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொண்ட பொலிஸ் அதிகாரியொருவர், அதன் முடிவுகள் கிடைப்பதற்கு முன்னரே பசறையிலுள்ள டிப்போ ஊழியர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், அவரது பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்தே இ.போ.ச. பேருந்து டிப்போவின் 8 ஊழியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment