ஏறாவூர் நகரில் 874 பேரிடமிருந்து பீசீஆர் மாதிரிகள் பெறப்பட்டதில் இதுவரை 10 பேருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Saturday, November 28, 2020

ஏறாவூர் நகரில் 874 பேரிடமிருந்து பீசீஆர் மாதிரிகள் பெறப்பட்டதில் இதுவரை 10 பேருக்கு கொரோனா

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் நகரில் 874 பேரிடமிருந்து கொரோனா வைரஸ் பீசீஆர் மாதிரிகள் பெறப்பட்டதில் இதுவரை 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷாபிறா வஸீம் தெரிவித்தார்.

உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த பரிசோதனைகள் கடந்த ஓகஸ்ட் 14ஆம் திகதியிலிருந்து நவம்பர் 28ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் மேல் மாகாண கொரோனா வைரஸ் தொற்று கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் தெரியவந்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மீன் வியாபாரிகள் வாகன சாரதிகள் உள்ளிட்ட தொற்றுக்கு உள்ளாகக் கூடிய சாத்தியப்பாடான பிரிவினரை இலக்கு வைத்தே பீசீஆர் பரிசோதனைகள் இடம்பெறுவதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷ‪hபிறா கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad