தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெற்ற 10 மாணவர்கள் - News View

Breaking

Post Top Ad

Monday, November 16, 2020

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகள் பெற்ற 10 மாணவர்கள்

இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 10 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தியோகப்பூர்வ ஆவணத்திற்கிணங்க இது உறுதியாவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையின் யெஹாரா யெத்மினி, இரத்தினபுரி எஹலியகொட ஆரம்பப் பாடசலையின் செனுதி தம்சரா, காலி சங்கமித்தா கல்லூரியின் விதும்ஸா சந்துன்தி, பொலன்னறுவை சிறிபுர ஆரம்ப பாடசாலையின் எச்.எம். தேனுஜ மனுமித பண்டார ஆகியோர் 200 புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

பண்டாரகம தேசிய பாடசாலையின் ஹீனுத சஸ்மித, இங்கிரிய சுமனஜோதி ஆரம்பப் பாடசாலையின் தெவிலி யசஸ்மி, அம்பிலிபிட்டிய ஜனாதிபதி மத்திய கல்லூரியின் பீ.கே.கொவிந்து சிரன்ஜித் ஆகியோரும் 200 புள்ளிகளைப் பெற்ற மாணவர்களாவர்.

இதேவேளை, மருதானை சாஹிரா கல்லூரி மாணவர் மொஹமட் ஃபர்ஸான் மொஹமட் அமரும் 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கல்வி நடவடிக்கைகளில் மாத்திரமல்லாது நீச்சல், செஸ் விளையாட்டுகளில் திறமைகளை வௌிப்படுத்தும் அமர், பாடசாலையின் சாரணர் அணியின் உறுப்பினருமாவார்.

கடந்த ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்றிரவு வௌியாகின. www.doenets.lk மற்றும் results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad