3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து, மூவர் படுகாயம் - யாழில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Thursday, November 19, 2020

3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து, மூவர் படுகாயம் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம், ஓட்டுமடச் சந்தியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடனொன்று மோதி இடம்பெற்றுள்ள விபத்தில், 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (19) பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

யாழ். நகரிலிருந்து ஆறுகால்மடம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது, அவ்வீதி ஊடாக யாழ். நகரம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பட்டா வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதியதுடன், அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதி விபத்திற்குள்ளானது. .

படுகாயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(நிதர்சன் விநோத்)

No comments:

Post a Comment

Post Bottom Ad