ஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 26 பேர் உயிரிழப்பு, 17 பேர் காயம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

ஆப்கானிஸ்தான் ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல் - 26 பேர் உயிரிழப்பு, 17 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் இன்று (29) பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 26 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், ஆங்காங்கே வன்முறை தாக்குதல்கள் மற்றும் மோதல்கள் நீடிக்கின்றன. குறிப்பாக காஸ்னி மாகாணத்தில் தொடர்ந்து சண்டை நடக்கிறது.

இந்நிலையில், காஸ்னி மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்திற்குள் இன்று ஒரு கார் அத்துமீறி நுழைந்தது. அதை தடுக்க பாதுகாப்பு படையினர் முயன்றும் முடியவில்லை. 

அதிவேகமாக ராணுவ தளத்தற்குள் நுழைந்த அந்த கார் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் சுமார் 26 வீரர்கள் உயிரிழந்தனர். 17 வீரர்கள் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 

பயங்கரவாதி வெடி குண்டுகளை காரில் ஏற்றி வந்து வெடிக்கச் செய்து இந்த தற்கொலை தாக்குதலை நடத்தி உள்ளான். கடந்த சில மாதங்களில் நிகழ்ந்த தாக்குதல்களில் இது மிகவும் கோரமான தாக்குதலாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment