அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிர்ச் செய்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 25, 2020

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிர்ச் செய்கை

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் சோளம் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்காக விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதன்படி 200 ஏக்கர் நிலப்பரப்புக்கு தேவையான சோள விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் வேலைத்திட்டம் நாளை (26) மத்தளையியில் ஆரம்பமாகவுள்ளது.

நேற்றையதினம் (24) சுற்றாடல் துறை அமைச்சில் இது சம்பந்தமாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக மேலும் 4, 5 வருடங்களுக்கு மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவது கடினம் என்பதால் சர்வதேச உலக உணவு உற்பத்தி கூட வீழ்ச்சி அடையக்கூடும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நம் நாட்டில் முடிந்தவரை உணவுப் பயிர்களை பயிரிட பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும். அதற்காக சகல அமைச்சுக்களும் முடிந்தவரை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி அறிவுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதன்படி அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் சோளம் பயிரிடுவதற்கு தேவையான உயர்தர சோள விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதற்காக அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 375 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இதற்கு விண்ணப்பிக்கும் ஏனைய குடும்பங்களுக்கும் சோள விதைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment