20 க்கு ஆதரவளித்த 9 பேரையும் ஆளும் தரப்பு கும்பலில் அமர வையுங்கள் - லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Friday, November 13, 2020

20 க்கு ஆதரவளித்த 9 பேரையும் ஆளும் தரப்பு கும்பலில் அமர வையுங்கள் - லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகரிடம் கோரிக்கை

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) 

அரசாங்கம் கொண்டு வந்த 20 ஆம் திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 9 பேரையும் ஆளும் தரப்புடன் இணைத்து விடுமாறும், எதிர்க்கட்சியில் அவர்களை வைத்திருந்தால் பாரிய பிரச்சினைகள் உருவாகும் எனவும் எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபாநாயகருக்கு கோரிக்கை ஒன்றினை முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று, நாட்டின் கொரோனா வைரஸ் நிலைமைகள் குறித்து எதிர்க்கட்சி கொண்டுவந்த விவாதம் முடிந்த பினனர் ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி கூறியதாவது, அரசாங்கம் கொண்டுவந்த 20 ஆம் திருத்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்பது பேரையும் எதிர்க்கட்சியுடன் அமர வைக்க வேண்டாம் என கடிதம் மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளேன்.

எனவே நீங்கள் அதனை கருத்தில் கொண்டு இவர்கள் ஒன்பது பேரையும் ஆளும் தரப்பின் பக்கம் ஆசனங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். 17 ஆம் திகதி வரவு செலவு திட்ட விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறும்.

ஆகவே இவர்கள் ஒன்பது பேரவையும் ஆளும் கட்சியின் பக்கமோ ஆளும் கட்சியின் கும்பலிலோ ஆசனங்களை ஒதுக்கிக் கொடுங்கள் என்றார் இதற்கு பதிலளித்த சபாநாயகர் இந்த காரணிகள் குறித்து நான் ஆராய்ந்து முடிவு ஒன்றினை வழங்குகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment