மேல் மாகாணத்துக்கு வெளியே கொவிட்-19 நோயாளர்களின் வீதம் குறைந்துள்ளது : வைத்தியர் சுதத் சமரவீர - News View

About Us

About Us

Breaking

Friday, November 13, 2020

மேல் மாகாணத்துக்கு வெளியே கொவிட்-19 நோயாளர்களின் வீதம் குறைந்துள்ளது : வைத்தியர் சுதத் சமரவீர

மேல் மாகாணத்துக்கு வெளியே கொவிட்-19 நோயாளர்கள் குறைந்த வீதத்தில் உள்ளதாக தலைமை தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்துக்கு வெளியே நோயாளர் எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டாலும் மேல் மாகாணத்தினுள் குறிப்பாக கொழும்பு மாநகர சபை பகுதியில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றார்.

கடந்த வியாழக்கிழமை பதிவான 396 நோயாளர்களில் 296 போ் மேல் மாகாணத்திலிருந்தும் அவர்களில் 232 நோயாளர்கள் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் மேல் மாகாணத்தில் அநேக பிரதேசங்களில் கட்டுப்பாடுகள் அமுலிலுள்ளதால் கொவிட்-19 நோயாளர்களிடையே நடத்தப்பட்ட பிசிஆர் சோதனைகளின் அளவில் குறைவு ஏற்படும் என நாம் நம்புகிறோம் என்றார்.

வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கியமான காரணிகளில் ஒன்று, மக்களிடையே நேருக்கு நேர் தொடர்புகளைப் பேணுவதைத் தவிர்ப்பது என்று அவர் கோடிட்டுக் காட்டினார்.

இதனிடையே நாளை கொண்டாடப்படவுள்ள தீபாவளி பண்டிகை குறித்து கருத்து தெரிவித்த சமரவீர, இந்து மக்கள் பண்டிகையைக் கொண்டாட ஒரே இடத்தில் ஒன்றுகூடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மீறி அவ்வாறு செய்தால் அது பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும் என்றும் கொண்டாட்டங்களை தமது வீடுகளுக்குள் மட்டுப்படுத்துமாறும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment