கொவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதில் இலங்கையின் நடவடிக்கைகள் உயர்ந்த தரத்தில் உள்ளன : தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர - News View

About Us

About Us

Breaking

Monday, November 16, 2020

கொவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதில் இலங்கையின் நடவடிக்கைகள் உயர்ந்த தரத்தில் உள்ளன : தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர

கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இலங்கை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் வேறு சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த தரத்தில் உள்ளதாக தலைமை தொற்று நோயியல் நிபுணர் மருத்துவர் சுதத் சமரவீர இன்று தெரிவித்தார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், வைரஸை கட்டுப்படுத்துதல் தொடர்பில் அரசு எடுத்த தீர்மானங்கள் குறிப்பிடத்தக்கவை என்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

“மக்களுக்கு இலவசமாக பிசிஆர் பரிசோதனைகளைச் செய்ய அனுமதிப்பது, கொவிட்-19 நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் இலவசமாக தங்குமிடத்தை வழங்குவது, அதிக ஆபத்துள்ள பிரதேசங்களை முடக்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுப்பது, முடக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்துள்ளனர்” என்றார்.

வரையறுக்கப்பட்ட வளங்களை உச்சபட்சமாக பயன்படுத்துவதன் மூலம் அரசாங்கம் நிலைமையை நன்கு கையாள்கிறது என்றும் வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளை எடுப்பதிலும் பாதிக்கப்பட்ட சமூகத்துக்கு சம்பந்தப்பட்ட வசதிகளை வழங்குவதிலும் சில நாடுகளில் அரசாங்கத்தின் தலையீடு மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் அவர் கூறினார்.

“எவ்வாறாயினும், கொவிட்-19 தொற்றிலிருந்து நாடு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் இலங்கை அதிகாரிகள் முன்னணி வகிக்கின்றனர்”என்று அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment