லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 11 வயது சிறுமிக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Tuesday, November 17, 2020

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 11 வயது சிறுமிக்கு கொரோனா

கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பு 12 ஐ சேர்ந்த சிறுமி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதுவரை வைத்தியசாலையில் ஐந்து வைத்தியர்கள் உட்பட 60 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் இயக்குனர், வைத்திய நிபுணர் ஜி.எஸ். விஜேசூரியா தெரிவித்தார். 

அவர்களில் பணிக்குழாமை சேர்ந்த 5 தாதியர்கள் மற்றும் கனிஷ்ட பணிக்குழுவை சேர்ந்த 6 பேரும் உள்ளடங்குகின்றனர். ஏனைய அனைவரும் சிறுவர்கள் மற்றும் தாய்மார்களாவர் எனவும் சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுள்ளதாகவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad