கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவரை காணவில்லை - ஒருவர் திருமணமாகி 10 நாட்கள் - News View

Breaking

Post Top Ad

Sunday, November 29, 2020

கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்கள் இருவரை காணவில்லை - ஒருவர் திருமணமாகி 10 நாட்கள்

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் காணாமற்போயுள்ளனர்.

வலி வடக்கு, தையிட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரே கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும், கடற்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், வலிகாமம் வடக்கு பகுதிக்குட்பட்ட பலாலி பொலிஸ் பிரிவு, தையிட்டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர்கள் இருவர், காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் கடலில் குளிக்கச் சென்ற போது அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

இவ்வனர்த்தத்தில் தையிட்டி தெற்கு, தையிட்டியைச் சேர்ந்த சிவச்சந்திரன் நிரோசன் மற்றும் மாசிலாமணி தவச்செல்வம் ஆகிய 19 வயது இளைஞர்களே அலையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக பலாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அலையில் சிக்கி காணாமல் போயுள்ள மாசிலாமணி-தவச்செல்வம் என்ற இளைஞருக்கு திருமணமாகி 10 நாட்களே ஆகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன், நிதர்ஷன் வினோத்)

No comments:

Post a Comment

Post Bottom Ad