கிழக்கு மாகாணத்தில் இதுவரை 107 பேருக்கு கொரோனா தொற்று! - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 107 பேருக்கு கொரோனா தொற்று!

கிழக்கு மாகாணத்தில் இதுவரை 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று (திங்கட்கிழமை) காலை ஆறு பேர் புதிய தொற்றாளர்களாக உறுதிப்படுத்ததையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆக உயர்வடைந்துள்ளது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் நெருங்கிய 218 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 06 பேர் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் 67 பேரும் திருகோணமலையில் 13 பேரும் கல்முனையில் 20 பேரும் அம்பாறையில் 7 பேரும் கொரோனா வைரஸ் தொற்றில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாகாணத்தில் ஐந்து சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மக்கள் அவதானமாக செயற்படுமாறும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை மக்கள் அடையாளம் கண்டு தெரிவிக்குமாறும் சன நடமாட்டத்தை குறைக்குமாறும் இயலுமானவரை வீட்டில் இருக்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவுறுத்துள்ளார்.

No comments:

Post a Comment