பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர் - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

பிரதமர் மஹிந்தவை சந்தித்தார் இந்திய உயர் ஸ்தானிகர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துப் பேசியுள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று (வியாழக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக குறித்த சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

பாடசாலைகள் மற்றும் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய குடிநீர் திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர், இந்திய உயர் ஸ்தானிகருடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன், சுகாதாரம், சூழல் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, கழிவுநீர் முகாமைத்துவம் உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்துவது குறித்தும் இந்திய உயர் ஸ்தானிகர் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

மருத்துவத்துறை மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் உள்ள தேவைப்பாடுகள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்திய உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த விடயங்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமரிடம் உறுதியளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad