பரீட்சை திணைக்கள அதிகாரியின் கணவருக்கு கொரோனா - உண்மைக்கு புறம்பான செய்தி - News View

Breaking

Post Top Ad

Thursday, October 15, 2020

பரீட்சை திணைக்கள அதிகாரியின் கணவருக்கு கொரோனா - உண்மைக்கு புறம்பான செய்தி

பரீட்சை திணைக்களத்தின் விசாரணைக் கிளை அதிகாரியின் கணவர் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களிலும் சில பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்ட செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று பரீட்சை திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் வைத்திய ஆலோசனைக்கமைய அதிகாரியின் கணவர் இரண்டு முறை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் பெறுபேறுகளுக்கு அமைவாக கொவிட்-19 தொற்று நோயாளர் அல்ல என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad