இலங்கை - கொரிய பிரதமர்களுக்கு இடையில் தொலைபேசி கலந்துரையாடல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 20, 2020

இலங்கை - கொரிய பிரதமர்களுக்கு இடையில் தொலைபேசி கலந்துரையாடல்

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கொரிய பிரதமர் சுங் சை-கியுனுக்கும் இடையில் தொலைபேசி மூலமான கலந்துரையாடலொன்று இன்று (2020.10.20) இடம்பெற்றுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரிய பிரதமர் சுங் சை-கியுன் இதன்போது இரு தரப்பு உறவை மேம்படுத்தல், கல்வி, முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. 

இது குறித்து பிரதமர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில், இன்று காலை தொலைபேசி அழைப்பு எடுத்த கொரிய பிரதமர் சுங் சை-கியுனுக்கு நன்றி கூறுகிறேன். 

பரஸ்பர நலன்களின் பகுதிகளை மேம்படுத்துவதில் ஒரு உற்பத்தி பரிமாற்றம் இருந்தது. கடல்சார் பல்கலைக்கழகம், முதலீடு மற்றும் சுற்றுலாவுக்கான தொழில்நுட்ப உதவி முன்னுரிமைகள் ஆகியன கலந்துரையாடப்பட்டன. நான் இலங்கைகையை பார்வையிட கொரிய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளேன். என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment