வெளியுறவுக் கொள்கையில் பேணப்பட்டு வந்த நடுநிலைமை தற்போது எங்கே? : மங்கள விசனம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

வெளியுறவுக் கொள்கையில் பேணப்பட்டு வந்த நடுநிலைமை தற்போது எங்கே? : மங்கள விசனம்

(நா.தனுஜா) 

இன, மத சிறுபான்மையினர் தொடர்பில் சீனாவினால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் கொள்கைகள் பற்றிய கியூபாவின் கருத்தை ஆதரித்தமையின் ஊடாக வெளியுறவுக் கொள்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடுநிலையை இலங்கை கைவிட்டிருக்கிறது என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார். 

இது தொடர்பில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார். 

அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது. 'இன, மத சிறுபான்மையினர் தொடர்பில் சீனாவினால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சின்ஜியாங் மற்றும் திபெத் கொள்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் கியூபாவினால் முன்வைக்கப்பட்ட கருத்தை ஆதரித்தமையின் ஊடாக இலங்கை அதன் வெளியுறவுக் கொள்கையில் கடைப்பிடித்து வந்த நடுநிலையைக் கைவிட்டிருக்கிறது' என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். 

ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடரில் சின்ஜியாங்கில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத ஒழிப்பு மற்றும் ஒழுங்கு முறைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையிலான அறிக்கையை 45 நாடுகளின் சார்பில் கியூபா வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment