தற்போது பரவும் கொரோனா வெளிநாட்டிலிருந்து காவி வரப்பட்டதொன்று - உறுதிப்படுத்தியது தொற்று நோய் தடுப்பு பிரிவு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

தற்போது பரவும் கொரோனா வெளிநாட்டிலிருந்து காவி வரப்பட்டதொன்று - உறுதிப்படுத்தியது தொற்று நோய் தடுப்பு பிரிவு

(ஆர்.யசி)

மினுவாங்கொடை பிரென்டிக்ஸ் மற்றும் பேலியகொடை மீன் சந்தையில் ஏற்பட்ட கொவிட் கொத்தணி மூலமாக நாடளாவிய ரீதியில் பரவ ஆரம்பித்துள்ள கொவிட்-19 வைரஸானது இதற்கு முன்னர் முதலாம் அலையாக உருவாகிய வைரஸ் வகையை சாராததாகவும், இப்போது இரண்டாம் அலையாக பரவி வரும் வைரஸ் "கொவிட்-19, சார்ஸ் "வைரஸ்களின் B142 உப வகையை சார்ந்த ஒன்றாகும் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்போது நாட்டில் பரவும் வைரஸ் நிச்சயமாக வெளிநாட்டில் இருந்து காவி வரப்பட்ட ஒன்றாகும் என்பதை தொற்று நோய் தடுப்பு பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது.

நாட்டில் பரவிக் கொண்டுள்ள கொரோனா வைரஸ் பரவலின் வீரியம், கனம் ஆகியவற்றில் மாற்றங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டதை அடுத்து கந்தக்காடு, மினுவாங்கொடை, மற்றும் பேலியகொடை ஆகிய கொரோனா கொத்தணிகளில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வுகளை ஸ்ரீ ஜயவர்தனபுர பலகலைக்கழகம் ஆரம்பித்துள்ளது, இந்த பரிசோதனைகள் மற்றும் ஆய்வின் முதற்கட்ட ஆய்வறிக்கை இன்று காலை சுகாதார அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் பிரகாரம் இப்போது பரவும் வைரஸானது இதற்கு முன்னர் இலங்கையில் பரவிய கொரோனா வைரஸ் அல்ல என்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் வைத்தியர் சஞ்சீவ குணசிங்க தெரிவித்தார்.

No comments:

Post a Comment