மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களை முகநூல் பதிவுகளை வைத்து கண்டுபிடிக்கும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களை முகநூல் பதிவுகளை வைத்து கண்டுபிடிக்கும் பொலிஸார்

மேல் மாகாணத்திலிருந்து ஊரடங்கிற்கு முன்னர் வெளியேறியவர்களை முகநூல் பதிவுகள் மூலம் கண்டுபிடித்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய பலர் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து படங்களை பதிவு செய்துள்ளனா் என தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாங்கள் பொலிஸாரை ஏமாற்றிவிட்டு தப்பிவிட்டோம் எனவும் பதிவு செய்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபரங்களை அடிப்படையாக வைத்து மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

29-30ஆம் திகதிகளில் மேல் மாகாணத்திலிருந்து வந்த எவரையும் கண்டுபிடிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப“ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறிய எவரும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மிகவும் ஆபத்தான பகுதி இங்கிருந்து வேறு பகுதிகளுக்கு செல்வதால் அந்த பகுதிகளுக்கு ஆபத்தான நிலை உருவாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment